மலையகத்தை உலுக்கிய கோர விபத்து~21 பேர் காயம்

0
153

பண்டாரவளை கிரிஓருவ வீதியின் ஐசெலாப் பகுதியில் லொறி ஒன்று (22) மாலை விபத்துக்குள்ளானதில் தோட்டத் தொழிலாளர்கள் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த 19 பெண்களும் மூன்று ஆண்களும் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் படுகாயமடைந்த 7 பெண்கள் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பண்டாரவளை சென்ஜென் தோட்டத்தில் பணி முடிந்து தொழிலாளர்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here