மலையக அரசியல்வாதிகள் தமக்கென ஒழுக்கக் கோவை ஒன்றை உருவாக்கிக் கொள்ளவது அவசியம்! : மைக்கல் ஜோக்கிம்

0
126

கடந்த வாரத்தில் பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்ட சிலரின் செல்பி எடுத்த சம்பவம் உட்பட இந்த போராட்டத்தை ஒரு வகையில் கேலிக்கூத்திற்கு உரியதாக ஆக்கிவிட்டதாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டடிருந்ததுடன் அனேக அச்சு இலத்திரனியில் ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டிருந்தன.

ஒரு சமூகத்தின் வாழ்வாதார பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற இந்த போராட்த்தில் கலந்கொண்டவர்கள் அந்த சமூகத்தின் கௌரவத்தையும், பிரச்சினையின் பாரதூரத்தையும் நாட்டுக்கும் விசேடமாக பெரும்பான்மை சமூகத்திற்கும் எடுத்துகாட்டாக நடந்து கொண்டிருக்க வேண்டுமென பிரிடோ நிறுவன தலைவர் மைக்கல்ஜோக்கிம் தெரிவித்தார்.

கொழும்பில் நடைப்பெற்ற பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டம் அதிஸ்டவசமாக இந்த சத்தியாகிரத்தின் போது முன்வைக்கப்டட கோரிக்கை வெற்றியடைந்திருப்பது ஒரு திருப்தி தரும் விடயம். எனினும் இம்மாத சம்பள தினத்தின் பின்னரே அது குறித்து முழுமையாக திருப்தியடைய முடியும்.

சத்தியாகிரத்தில் நடந்த விடயங்களை இன்னொரு கோணத்தில் இருந்து பார்ப்பது அவசியமாகும். மலையக அரசியல் களம் அடாவடித்தன, அதிகார ஆணவத்தை காட்டும் ஒரு நிலையில் இருந்து வாக்காளர் மக்களை மதிக்கும் அவர்களை கௌரவப்படுத்தும், மாலையையும் பொன்னாடையை யும் எதிர்பார்க்காத ஒரு கலாச்சாரத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. இது ஒரு நல்ல ஜனநாயக காலச்சார மாற்றமாகும்.

இந்த மாற்றத்தை தக்க வைத்துக்கொள்வது அவசியமாகும். இந்த மாற்றத்திற்கு ஏற்றமுறையில் தங்களை நெறிப்படுத்திக் கொள்ள இன்னும் தங்களை பழக்கிக் கொள்ள முடியாதவர்களாக அரசியல் மேடைகள் கேலிக்குறியதாக்கப்படுகின்றன.

இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட தலைவர்கள் அனைவருமே தங்கள் நடத்தும் பொதுநிகழ்வுகள், அரசியல் மேடைகளில் தலைவர்கள் பாராளுமன்ற, உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் உதவியாளர்கள் ஆரோக்கியமாக நடந்து கொள்ளவது தொடர்பாக ஒரு ஒழுக்கக் கோவை ஒன்றை ( Code of Conduct ) உருவாக்கிக்கொள்வது மிகவும் அவசியம்.

மேடைகளில் செல்பி எடுத்தல் , கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்தல், மது அருந்தி நிகழ்வுகளின் பங்கு பற்றாமல் இருத்தல், பொதுமக்களை கௌரவப்டுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், நாகரீகமான முறையில் பேசுதல் மக்களின் கருத்துக்களை கேட்டல்.

நிகழ்வுகளை கௌரவமான முறையில் நடத்துதல் தொடர்பான விடயங்களை இந்த ஒழுக்கக் கோவையல் உள்ளடக்கலாம். சத்தியாகிரகபோராட்த்தை கண்டனம் தெரிவிக்க பயன் படுத்தியது போலவே, ஒரு ஆக்கபூர்வமான மாற்றம் தொடர்பாக சிந்திக்கத் தூண்டிய ஒரு நிழழ்வாக மாற்றினால் மலையக பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த மக்களை மதித்து ஜனநாயக பண்புகளை மேம்படுத்தும் கலாச்சாரத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

மலையக சமுதாயம் படிப்படியாக மாற்றம் கண்டும் வரும் வேளையில் புதிய மாற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆக்கபூர்வமாக சிந்திப்பதும், செயல்படுவதும், விமர்சனம் செய்வதுமே இன்றைய காலத்தின் தேவையாகும்.

மாறிவரும் மலையக அரசியல் கலாச்சாரத்தை முன்னோக்கி நகர்த்த மலையக தலைவர்கள் தமக்கொன ஒரு ஒழுக்கக் கோவையை ஏற்படுத்துவம் அதன்படி நடந்து கொள்ளவேண்டியன் அவசியம் குறித்து நடைபெற்ற செயலமர்வில் பிரிடோ நிறுவனத் தலைவர் திரு மைக்கல் ஜோக்கிம் கலந்துக்கொண்டு பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

கு.புஸ்பராஜ் அக்கரப்பத்தனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here