மலையக அரசியல் அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு சிறப்பு உரையரங்கம் 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை அட்டனில் நடைபெற்றது.அட்டன் – டிக்கோயா நகர சபை மண்டபத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மலையக அரசியல் அரங்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொழிற்சங்க துறவி அமரர். வி.கே வெள்ளையன் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மூத்த ஊடகவியலாளர் – அரசியல் ஆய்வாளர் விக்டர் ஐவன் நிகழ்நிலை தொழிநுட்பத்தின் ஊடாக உரையாற்றினார்.
இதில் சட்டத்தரணி சஞ்சுளா பீட்டர்ஸ், அட்டன் – டிக்கோயா நகரசபை உறுப்பினர் எஸ்.கேசவமூர்த்தி உட்பட இளைஞர், யுவதிகள் என பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.
க.கிஷாந்தன்