மலையக ஆசிரியர் முன்னணியின் ஏற்பாட்டில் கல்வி பொது சாதாரணதரத்தில் ஐந்து பாடங்களுக்கு மேல் “ஏ” சித்திகளை பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு நுவரெலியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது மாணவர்களுக்கும் இந்த மானவர்கள் சித்தி அடைவதற்கு காரணமாக இருந்த ஆசியர்களுக்கும் பதக்கம். சான்றிதழ்கள். நினைவு சின்னங்கள் வழங்கபட்டன.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இரதாகிருஸ்ணன்¸ விஷேட அதிதிகளாக மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர். ராஜாராம்¸ சோ.சிறிதரன்¸ நுவரெலியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திசாநாயக்க மத்திய மாகாண மேலதிக கல்வி பனிப்பாளர்¸ எஸ்.சதீஸ்¸ உட்பட கல்வி அதிகாரிகள்¸ அதிபர்கள்¸ ஆசிரியர்கள்¸ பெற்றோர்கள் கலந்துக் கொண்டார்கள்.
பா.திருஞானம்