மலையக மக்கள் முன்னணி,மலையக இளைஞர் முன்னணியில் இணைந்துக்கொள்ள வேண்டும் என்ற பிற அமைப்புக்களின் இளைஞர் உறுப்பினர்களுக்கு மலையக இளைஞர் முன்னணயின் செயலாளர் என்ற ரீதியில் அவர்களை வரவேற்க மலையக இளைஞர் முன்னணியும் மலையக மக்கள் முன்னணியின் உயர்பீடமும் தயாராக இருக்கின்றது என அதன் இளைஞர் அணியின் செயலாளர் தாளமுத்து சுதாகரன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
பிற கட்சிகளை விமர்சித்துக்கொண்டு தலைமைக்கு தூபம் போடும் வெறும் ,இளைஞர் அமைப்பாக ,இருக்க வேண்டுமென்று அன்றைய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் மலையக மக்களின் விடுதலை விளங்கை உடைத்தெரிந்த வீரத் தலைவன் சந்திரசேகரன் நினைத்ததில்லை. மலையக மக்கள் முன்னணி என்ற ஸ்தாபனத்தின் வீழ்ச்சி பாதையை செப்பனிட்டு மலையக மக்களுக்கு சேவையாற்ற மிக பிரமாண்ட அமைப்பாக உருவாக்கிய மலையக மக்கள் முன்னணியின் தற்போதைய தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமாகிய வே.இராதாகிருஸ்னண் மலையக இளைஞர்களை சரயான பாதையில் வழி நடத்துகின்றார்.
மலையகத்தை பற்றி சிந்திக்கும் அமைப்பும் மலையகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு செலுத்தும் அமைப்பு மலையக மக்கள் முன்னணியாகும்.அதே வேளை மலையக மக்கள் முன்னணியில் பதவி வகிப்போர் வெருமனே பதவிக்காக உள்ளவர்களோ அல்லது ஊடக அரசியல் மட்டுமே செய்பவர்களோ அல்ல பல வருடங்களாக மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டு தலைவர் வழியில் ,இணங்காக்க சிறை சென்று எங்கு தமிழன் அடிபட்டாலும் கொதிக்தெழும் கொள்கை கொண்டோர்எவர் எம்மோடு வந்து இணைந்தாலும் வரவேற்கும் பக்குவம் கொண்டவர்கள் மலையக மக்கள் முன்னணியினர்.மலையக
இளைஞர் முன்னணி என்பது மலையக மக்களின் போர் வாள் அது கணமிக்கது தாங்கிப்பிடிக்க தகுதிகொண்டோர் வேண்டும். 1989களில் பெருந்தலைவர் சந்திரசேகரன் கரம் இருந்த போர் வாள் பிறகு இன்றைய மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமாகிய ராஜாராம் கரங்களுக்கு சென்றது. இன்று அது தாளமுத்து சுதாகரனாகிய என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதன் வழிமை எதிர்காலங்களில் வெளிப்படும்.எம்மோடு வந்து இணைவோரை இன்முகத்தோடு வரவேற்போம் எனறார்.
தலவாக்கலை நிருபர்