மலையக ஊடகவியலாளர்களை ஓரங்கட்டும் அமைச்சர்; ஏறிவந்த படிகளை எட்டி உதைக்கிறாரா?

0
107

ஊடகங்களை ஒதுக்கிவிட்டு அல்லது ஓரங்கட்டிவிட்டு அரசியல் செய்ய முற்படுவது முள்ளில் சேலையை போட்டுவிட்டு எடுப்பதற்கு சமமானது, மலையகத்தில் அமைச்சர் ஒருவர் மலையகத்தில் கடமையாற்றும் ஊடகத்துறையை சார்ந்தவர்களை ஒரு பொருட்டாவே எடுப்பது இல்லையாம் இவர் இந்த அமைச்சு பதவியை கைப்பற்றுவதற்கு முன்னர் மலையகத்தில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் பேதமில்லாமல் இவரின் வெற்றிக்கு உழைத்த ஊடகவியலாளர்கள் இன்று மிக வேதனையுடன் இருக்கிறார்கள் .

இவருக்கு எதிராக சக்தி ஊடகம் கடும் மோசமான விமர்சனங்களை முன் வைத்த போதெல்லாம் அதை முறியடிக்கும் வகையில் இந்த மலையக ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் இருந்ததை இந்த அமைச்சர் மறந்து செயலாற்றுவது வருந்தத்தக்கது, தான் செய்யும் விடயங்களை இந்த மலையக ஊடகவியலாளர்கள் செய்தியாக்காவிட்டால் அது மக்களை சென்றடைந்து இருக்குமா என்று இவர் இப்போது சிந்திப்பதில்லை, தலைநகரில் உள்ள சில ஊடக பெருந்தலைகளை தனது கையகத்தில் இருந்துவிட்டால் காரியம் எல்லாம் சாதித்து விடலாம் என்ற இவரின் நோக்கு எதிர்காலத்தில் தரைமட்டமாகவே மாறும்.

மலையகம் சார்ந்த ஊடகவியலாளர்களை கொழும்பில் இயங்கும் அந்த சூரிய மற்றும் கேசரியையும் தனக்கு சார்பாக வைத்துக்கொண்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்ற இவரின் தவறான கணிப்பு எதிர்காலத்தில் புஷ்வாணமாக மாறும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

இந்த ஊடகங்களை விட மலையகம் சார்ந்த அந்த மக்களை திசைத்திருப்ப கூடிய ஊடகங்கள் பற்றிய அறிவு இவருக்கு கிடையாது, கால ஓட்டத்தில் இதை அவர் நேரடியாகவே கண்டு கொள்வார், யாராக இருந்தாலும் தான் ஏறிவந்த படியை மறந்துவிட்டு ஹெலிகோபிடரில்” பறக்கும் காலம் வந்தவுடன் அதை ஏறி மிதிப்பது வேலைக்கு ஆகாது அரசியல் என்பது ஒரு நிமிடத்தில் புரட்டிப்போட்டுவிடும் அது மக்கள் கைகளில் உண்டு.

வியாபார நோக்கோடு செயலாற்றும் ஊடகங்களைவிட மலையக மக்களின் மனதறிந்து செயலாற்றும் ஊடகங்கள் உண்டு அதை நீங்கள் பொருட்படுத்தாவிட்டாலும் புறக்கணிக்க முனைவது உங்களுக்கு ஏற்புடையது அல்ல காற்றுப்போன பந்தைப்போன்று ஊடகத்துறையில் ஒதுக்கப்பட்ட ஒருவரை உங்கள் வசம் வைத்துக்கொண்டு ஏனைய ஊடகவியலாளர்களை ஓரங்கட்ட நினைப்பது புத்தி சாதுர்யம் அல்ல அது உங்களுக்கு நீங்களே சொருகிக்கொள்ளும் ஆப்பு என்பதை மறந்துவிடாதீர்கள்?

காலங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதில்லை அங்கு சீரற்ற காலநிலை சிலவேளை புயலும் வந்துபோகும் அப்போது நினைத்தவை எல்லாம் தலைகீழாக மாறும் மற்றவர்களை மதிக்கும் ஒருவனே தலைவனாக முடியும் அதைவிட தலைவனாக வருவதற்கு முன்னர் உங்கள் வீட்டுப்பிள்ளை என்று மேடையில் சொன்ன வார்த்தைகள் நினைவில் இருக்க வேண்டும், கடந்த தேர்தலில் அரசியல் மேடையில் ஒரு ஊடகரை மேடையில் வைத்தே அவமானம் செய்த மலையக அரசியல் பிரமுகரின் செயல் அவரை மக்கள் மத்தியில் இருந்து ஓரங்கட்டுவதற்கு இந்த ஊடகங்களின் செயற்பாடும் ஒரு காரணமாக இருந்ததை மறந்து விடாதீர்கள்.

பல்வேறு அரசியல் ஜாம்பவான்களை இந்த மலையகம் கண்டுவிட்டுத்தான் போய் இருக்கிறது, உங்களின் பல நிகழ்வுகளை செய்தியாக்க வந்த மலையக ஊடகவியலாளர்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், இதனால் உங்களின் எந்த நிகழ்வுக்கும் இவர்கள் வருவதில்லை உங்களின் அந்த தங்கமான ஊடகர் இவர்களை ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லையாம்” அமைச்சரே கடந்து வந்த பாதையை கண்டு கொள்ள வேண்டாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், காலங்கள் எமது கைகளில் இல்லை,  பதவி உங்களிடம் பேனாக்கள் எம்மிடம். நன்றி”

மலையக ஊடகவியலாளர் சார்பாக கருடனுக்கு வந்த மடல் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here