மலையக கட்சிகள் பேதமின்றி செயலாற்றுவோம்; வேவன்டன் பாலம் திறப்புவிழாவில் ஆர். ராஜாராம்!

0
140

மலையக தோட்ட புறங்களின் அபிவிருத்திக்கு மலையக தலைமைகள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் சேவை செய்துள்ளார்கள். அதை யாராலும் மறுக்க முடியாது. இனி இந்த மக்களுக்கு சேவை செய்யும் ஒவ்வொருவரும் கட்சி தொழிற்சங்க பேதமின்றி சேவை செய்ய வேண்டும். மிகவும் பின் தள்ளபட்ட நிலையில் வாழும் இவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால் இந்த பேதங்கள் உடைத்து எறியபட வேண்டும் என்று கூறுகின்றார் மத்திய மகாண சபை உறுப்பினர் ஆர.ராஜாராம் அவர்கள்.

05

கொத்மலை வேவன்டன் தோட்டத்திற்கும் கோதை கிராமத்திற்குமான உறவு பாலம் ஒன்று கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தவைவருமான் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் ழூலம் அமைக்கபட்ட பாலத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்படி இவ்வாறு தெரிவித்தார்.

35 வருடங்களாக இந்த ஆற்றை கடப்பதில் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்தனர். இறந்தவரை கூட மயானத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதற்கு இந்த பாலம் அமைக்கபட்மையை இட்டு மக்கள் நன்றியையும் தெரிவித்தனர்.

07

தொடர்ந்து அங்கு உரையாற்றிய மத்திய மாகாண சபை உறுப்பினர். பெருந்தோட்டம் அல்லது நுவரெலியா என்றதும் பிறருக்கு ஞாபகம் வருகின்றது வீட்டு வேலைக்கு ஆட்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று. இந் நிலை மலையத்தில் மாற வேண்டுமானால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நன்கு கல்வி கற்க வாய்ப்பு அளிக்க வேண்டும். அதற்கு மலையத்தில் தற்போது போதிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இல்லாதவர்கள் எங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள் எங்களால் உங்கள் பிள்ளைகளை கல்வி கற்பதற்காக தத்து எடுக்க முடியும்.

மலையகம் முன்னேற வேண்டுமானால் அது கல்வி என்ற ஒன்றில் மட்டுமே முடியும். அதே வேளை மலையத்திற்கான அபிவிருத்திகள் கட்சி தொழிற் சங்க பேதம் இன்றி செயற்பட வேண்டும் நாங்கள் அதையே செய்து வருகின்றோம் நாங்கள் வாக்கு பலத்திற்காக வேலை செய்யவில்லை பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திக்காகவே வேலை செய்கின்றோம். அவ்வாறான நிலையிலேயே மலையக மக்களின் அபிவிருத்தியை காணலாம் வெறுமனமே கட்சி தொழிற் சங்கம் என்று போனால் மலையகம் பாதிப்பு அடையும். எனது காரியாலயம் எந் நேரமும் மக்களின் சேவைக்காத திறந்துள்ளது. உங்கள் தேவைகளை எங்களிடம் கூறி முடிந்தளவு பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம் என்று கூறினார்.

பா.திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here