மலையக சத்தொச விற்பனை நிலையங்களில் அத்தியவசிய பொருட்கள் தட்டுப்பாடு மக்கள் பெரும் அவதி.

0
116

மலையக நகரங்களில் உள்ள சத்தொச விற்பனை நிலையங்களில் அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹட்டன் கொட்டகலை தலவாக்கலை அக்கரபத்தனை உள்ளிட்ட பல சத்தோச விற்பனை நிலையங்களில் அரசி, மா, சீனி, பருப்பு உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றன.

இதனால் இந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சத்தொச நிலையங்களுக்கு செல்லும் பெரும் பாலான மக்கள் ஏமாற்றத்துடன் திருப்புவதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து அத்தியவசிய பொருட்களின் விலை வானளவு உயர்ந்துள்ளன.

இதனால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நியாயமான விலையில் சத்தொச நிலையங்களில் கிடைப்பதனால் இந்நிலையங்களை நோக்கி தூர பிரதேசங்களிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வருவதாகவும் இந்நிலையங்களில் போதியளவு பொருட்கள் இல்லாததன் காரணமாக மக்கள் ஏமாற்றத்துடன் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து நிலைய முகாமையாளர்களிடம் கேட்ட போது வழமையாக ஒரு வாரத்திற்கு அல்லது ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியசிய பொருட்கள் கொள்வனவு செய்து வருவதாகவும் எனினும் கடைகளில் அதிக விலைக்கு பொருட்கள் குறிப்பாக அரிசி பருப்பு சீனி .போன்ற பொருட்கள் அதிக விலைக்கு விற்பதனால் பொது மக்கள் ஒரிரு தடைவைகளுக்கு மேல் வந்து பொருட்களை கொள்வனவு செய்வதாகவும் கடந்த காலங்களில் ஒரு வாரத்தில் விற்பனையாகும் பொருட்கள் தற்போது ஒரு நாளில் விற்பனையாவதாகவும் இதனால் குறிப்பிட்ட பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவித்தனர்.

எனினும் குறித்த வர்த்தக நிலையங்களில அரசி ஐந்து கிலோவும்,பருப்பு 500 கிராம்,உள்ளிட்ட ஒரு சில பொருட்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றுக்கொடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. மலையக மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு சாப்பாட்டுக்கு வழியின்றி இருக்கின்ற நிலையில் மக்களுக்கு தேவையான அத்திவசிய பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான வழிகளை மேற்கொள்ளாது அரசியல் லாபம் கருதி செயப்படுவதன் காரணமாக மக்கள் எதிர்காலத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் மந்தபோசன நிலை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளும் வாக்கு பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here