சர்வதேச சிறுவர் தின நிழ்வுகள் மிக விமர்சையாக இலங்கையிலும் கொண்டாடப்படுகின்றது சிறுவர்களை மகிழ்வூட்டும் நிகழ்வுகளும் சிறுவர் உரிமைக்கான குரல்களும் ஓங்கிஒலிக்கின்றன இது இன்றுடன் நின்றுவிடக்கூடாது சிறுவர்கள் நலன்பேனும் நடவடிக்கை தொடந்தும் முன்னெடுக்கவேண்டுமென்று ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்திய சிறுவர் மேம்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுவர் தொழிலாளர் முறை முற்றாக தடுத்து நிறுத்தப்படவேண்டும் சிறுவர்துன்புறுத்தல்,சிறுவர்துஸ்பிரயோகம் என்பவற்றை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் அதோடு சிறார்களின் எண்களுக்கு மதிப்பளிப்பதோடு நாட்டிலுள்ள சகல சிறுவர்களும் பாடசாலைக்கு செல்வது உறுதிப்படுத்தவேண்டும் பாடசாலைக்கு அனுப்பாத சிறுவர்களின் பெற்றோர் பாதுகாவலர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அவ்வறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.