நுவரெலியா, தலவாக்கலை நகர சபைக்கு பதிவுப் பணம் நுவரெலியா தேர்தல் காரியாலயத்தில் இன்று 29.11.2017 செலுத்தப்பட்டது. இதன்போது நுவரெலியா நகரசபைக்கு 24 பேர்களும் தலவாக்கலை நகர சபைக்கு 14 பேர்களும் ஒரு ஆளுக்கு தலா ஆயிரத்து ஐநூறு வீதம் 57 ஆயிரம் ரூபா செலுத்தி, வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி செயலாளர் சாகர காரியவசம், சப்ரகமுவ மாகாணசபை முன்னாள் தலைவர் காஞ்சன ஜயவர்தன ஆகியோருடன் மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில்ராஜ், முன்னாள் நுவரெலியா மாநகர முதல்வர் மஹிந்த தொடம்பேகமகே உட்பட கட்சியின் சில முக்கியஸ்தர்கள் பிரதேச சபை நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த ரிஷி செந்தில்ராஜ், தாமரை மொட்டில் மலையகத்தில் அதிகமானவரை வெற்றிபெறச் செய்வோம். அதிகமான விருப்பு வாக்குகளை பெற்று எங்களின் மலையக தேசிய முன்னணி, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் கைகோர்த்திருப்பது எங்கள் மக்களின் வெற்றியாகும். இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது இப்போதே நாங்கள் வெற்றி எல்லையை அடைந்திருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் மக்கள் சேவை செய்வதே எங்கள் நோக்கம். இப்பொழுது மக்கள் சிறந்த ஒரு விழிப்புணர்வோடு இருக்கிறார்கள் என கருத்து தெரிவித்தார்.
டீ. சந்ரு