மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளராக லெட்சுமனார் சஞ்சய் நியமனம்.

0
98

மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளராக லெட்சுமனார் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.மலையக மக்கள் முன்னணியின் இம்மாத கூட்டத்தொடர் நுவரெலியா வாசிகசாலை மண்டபத்தில் 06.06.2022 மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.ராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கமான மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் பதவி நிர்வாக குழு உறுப்பினர்களின் ஏகோபித்த வாக்குகளால் லெட்சுமனார் சஞ்சய் அமைப்பு செயலாளராக தெரிவுசெய்யப்பட்டு பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here