மலையக பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுப்பதே எமது இலக்கு!

0
36

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு காணி உரிமையை பெற்றுக் கொடுப்பதேயாகும் என்றுஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ பகுதியில் நேற்று (19) இடம் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்ட மக்களுக்கான வீட்டுப் பிரச்சினை என்பது பொதுவான ஒன்றாகும். இதற்கான நிரந்தர தீர்வானது காணி உரித்தினை பெற்றுக்கொடுப்பதே ஆகும். எனவேதான் நான் அமைச்சுப் பதவியினை பொறுப்பேற்ற நாள் தொடக்கம் எமது மக்களுக்கான காணி உறுதியினை பெற்றுக்கொடுப்பதே நிறந்தர நோக்கமாக காணப்பட்டது.

பாராளுமன்றத்தில் 88 தடவை நான் பேசியிருக்கிறேன். அதில் 18 தடவைகள் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளேன். மிகுதியான 70 தடவைகள் மறைக்கப்பட்ட சமூகம் தொடர்பாக பேசியுள்ளேன்.

மலையகத்தை பொருத்த வரையில் வீட்டுத்திட்டத்தை விட காணிகளுக்கு மாத்திரமே நாம் முதலிடம் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் ஒரு தோட்டபகுதியில் நூறு குடும்பங்கள் இருந்தால் அந்த நூறு குடும்பங்களுக்கும் வீடுகள் கிடைக்காது. அரசாங்கம் மக்களை பொறுப்பேற்க வேண்டும் அவ்வாறு செய்தால் மாத்திரமே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை காணமுடியும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here