மலையக பல்கலைக்கழக நீண்டகால கனவு நனவாகுமா?

0
115

இன்று புத்திஜீவிகள் மட்டத்தையும் தாண்டி மலையக மக்களுக்கான தனியான பல்கலைக்கழக ம் தேவையென்ற விடயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது பல்கலைக்கழகம் என்பது பட்டம் வழங்கும் நிறுவனம் என்பதற்கப்பால் ஒரு சமூகமாற்றத்தில் பிரதான பங்குவகிக்கும் சமூக நிறுவனமாகும் விளங்குகின்றது இவ்வாறு ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்திய போறுப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்

பல்கலைக்கழகங்கள் அந்தந்த சமூகத்தில் கல்வி கலைகலாசார சமூக பொருளாதார அரசியல் மாற்றத்திற்கான பிரதான வழிகாட்டியாக பங்களிப்பு செய்கின்றது ஆனால் இரண்டுநூற்றாண்டு வரலாற்றைகொண்ட மலையகத்திற்கு வழிகாட்டுவதற்கான இதுவரை பல்கலைக்கழகம் ஒன்று அமையபெறாமை இந்த சமூகத்தின்சாபக்கேடா? என கேட்கத்தோன்றுகின்றது.

மேலும் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு ஏற்ற மாணவர்கள் இல்லை என்று இவ்விடத்தை தட்டிக்கழிக்கபார்க்கின்றனர் அவர்களிம் நான் ஒருவிடயத்தை கேட்கின்றேன் முன்னால் அமைச்சர் அமரர் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக தென்கிழக்கு(ஒலுவில்) பல்கலைகழகத்தை ஆரம்பித்தபோது அயிரக்கணக்கான முஸ்லிம் மாணவர்களை வைத்துக்கொண்டா ஆரம்பித்தார் இல்லையே இன்று அந்தபகுதிக்குசென்றுபார்த்தால் தென்கிழக்கு பல்கலைக்கழகம் முஸ்லிம் சமூகத்திற்காக எத்தனை சமூக உணர்வாளர்களையும் பட்டதாரிகளையும் உறுவாக்கிக்கொண்டிருக்கின்றதென்பதை தெரிந்துகொள்ளமுடியும்.

அன்று அஷ்ரப் அவர்கள் மேற்கொண்ட சமூக ஆக்கறையுடனா தூரநோக்கு செயற்பாடுகள்தான் இன்று பட்டதாரிகள் நிறைந்த சமூகமாக முஸ்லிம் சமூகம் உயர்ந்து நிற்கின்றது.

ஆகவே எமது சமூகத்தின் சார்பாக நாம் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் வேண்டுகோள்விடுக்கின்றோம் முதலில் மலையக பல்கலைகழகத்தை உறுவாக்குங்கள் மாணவர்கள் தானாக உறுவாவார்கள் முதலில் நமது சமூகத்தில் நிறைய பட்டதாரிகளை உறுவாக்குவோம் பின் தானக நிறைய டாக்டர்களும் பொறியிலாளர்களும் விஞ்ஞானிகளும் உறுவாவார்கள் தயவு யாராவது இந்த சமூகப்பணியை நிறைவேற்றுங்கள் இன்று அமரர் அஷ்ரப் அவர்களை நினைவுகூறுவது போல் நாளை மலையகம் உங்களையும் நன்றியுடன் நினைகூறும்.

 

ஜீவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here