மலையக பாடசாலைகளில் கணித பாட அடைவுமட்டத்தில் பாரிய பின்னடைவை நோக்கியுள்ள 127 பாடசாலைகளில்
“அனைவருக்கும் கணிதம்” வேலைத்திட்டம்- கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் நடவடிக்கை
கடந்;த வருடத்தை விட இவ்வருடம் கணிதப்பெறுபேறு தேசிய ரீதியில் அதிகரித்துள்ள வேளையிலும் தோட்டப்புற பாடசாலைகளில் அல்லது தோட்டப்புற மாணவர்களை அதிகமாக கொண்ட பாடசாலைகளில் கணித பாடத்தின் அடைவுமட்டமானது தேசிய மட்டத்தை விட மிக குறைவாகவே காணப்படுகின்றமை கண்டறியபட்டள்ளது இந் நிலமை மத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணத்தை அடிப்படையாக கொண்ட மாவட்டங்களிலேயே அதிகமாக காணப்படுகின்றது.
இந் நிலமையினை மாற்றுவதற்கும் கணித பெறுபேற்றினை மலையகத்தில் அதிகரிப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் பணிப்புறைக்கு அமைய கல்வி அமைச்சின் கணித பிரிவானது “அனைவருக்கும் கணிதம்” எனும் அடிப்படையில் துரித வேலைத்திட்டத்தை ஆரம்பித்து உள்ளது. இந்த வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பான கலந்துறையாடல் கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்த கலந்துறையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கணித பாட கல்வி பணிப்பாளர் திருமதி பிரியதா நாநயகார கல்வி அமைச்சின் தமிழ்மொழி மூல பாடசாலைகளின் பணிப்பாளர் எஸ்.முரளிதரன்¸ கவ்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி பணிப்பாளர் திருமதி சபாரஜ்சன் உதவி கணிதபாட கல்வி பணிப்பாளர்களான திருமதி நிரோசி கே.நாகேந்திரா¸ ஜகத்குமார ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த செயற்திட்டத்திற்கு மத்திய ஊவா சப்ரகமுவ மாகாணம் அடங்களாக 127 பாடசாலைகள் இனங்காட்டபட்டுள்ளன. கடந்த காலங்களில் தெரிவு செய்யபட்ட 127 பாடசாலைகளில் பெருந் தொகையான மாணவர்கள் கணித பாடத்தில் சித்தியெந்தவில்லை. இந் நிலை தொடரக் கூடாது என்ற கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணளினதும் கல்வி பணிப்பாளர்களினதும் எண்ணத்திற்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கபடுகின்றன. தற்போது இது மலையகத்தில் ஆரம்பிக்கபட்டாலும் குறுகிய காலத்தில் நாட்டில் காணப்படும் அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளிலும் ஆம்ரபிக்கபடும்
இதன் மூலம் மாணவர்களின் அடிப்படை கணித அறிவை அபிவிருத்தி செய்து மாணவர்களின் கற்றற்பேற்றினை அதிகரிக்க செய்து அவர்களின் குறைந்த மட்ட சித்தியான சாதாரண சித்தியை (ளு) அதிகரிக்க செய்வதே அதன் முதல் செயற்பாடாகும். இதனை முன்னெடுக்க பின்வரும் வகையில் செயற்பாடுகளை வகுக்கபட்டுள்ளது. பாடசாலைகளில் அடிப்படை கணித 53 எண்ணக்கருக்களை மாணவர்களுக்கு வழங்குவது¸ 53 அடிப்படை கணித எண்ணக்கருக்களை கொண்ட க.பொ.த. (சாஃத) பரீட்சை வினாத்தாளின் பகுதி 1 இனை முழுமையாக செய்வதன் மூலம் மாணவர்களை சாதாரண சித்தியை (ளு) பெற வைத்தல்¸ மாணவர்களின் பூரண பயிற்சிக்காக மொடியூல் ஒன்;றினை பெற்றுக் கொடுத்தல் தற்போது “கணிதபாடத்தின் அடைவ மட்டத்தை மேம்படுத்துவதற்கான துறித வேலைத்திட்டம்” என்ற தலைப்பில் புதிய புத்தகம் ஒன்றும் வெளியிடபட்டுள்ளன.
இந் வேலைத்திட்டதை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல பாடசாலை அதிபர்களுக்கு அடிப்படை கணித எண்ணக்கருக்கள் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்றினை நடாத்துவதன் மூலம் மாணவர்களின் சித்தி அடைவை அதிகரிக்க செய்தல்¸ ஆசிரிய ஆலோசகர்களை பயிற்றுவிப்பதன் மூலம் அவர்கள் கணிதபாட ஆசிரியர்களை முறையாக வழி நடாத்தி மாணவர்களின் அடிப்படை கணித எண்ணக்கருக்களை கண்டறிய செய்தல்¸ கணித பாட ஆசிரியர்களின் அடிப்படை கணித எண்ணக்கருக்களை கட்டியெழுப்பி மாணவர் மத்தியில் அது தொடர்பான அறிவை மேலோங்க செய்தல்¸ இதன் மூலம் மலையக மாணவர்களின் கணித பெறுபேற்று சதவீதத்தை அதிகரிக்க செய்து குறைந்த மட்ட சித்தியான சாதாரண சித்தியை அதிகரிக்க செய்தல் ஆதும்.
தொடர்ந்து இதனை தெரிவு செய்த பாடசாலைகளின் அதிபர்களுக்கான ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமொன்றினை அப்பிரதேசத்திலேயே நடாத்துதல்¸ தெரிவு செய்யப்பட்ட மாகாணத்தில் உள்ள ஆசிரிய ஆலோசகர்களுக்கு அடிப்படை கணித எண்ணக்கருக்கள் தொடர்பான அறிவை வழங்குவதற்கான நிகழ்ச்சி திட்டங்களை நடாத்துவதுடன் அவர்களை கொண்டே ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி செயற்பாடுகளை முன்னெடுத்தல். பிரதேச ரீதியாக தெரிவு செய்த ஆசிர்யர்களுக்கான செயலமர்வுகளை நடாத்தி ஆரம்பத்தில் ஆசிரியர்களின் அடிப்படை கணித எண்ணக்கருக்களை அபிவிருத்தி செய்து அதனை மாணவர்களின் மட்டத்திற்கு கொண்டு செல்லுதல்¸ வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை தொடர்ந்து மாணவர்களை குறித்த இலக்கிற்கு ஆசிரியர்கள் கொண்டு செல்கின்றார்களா என்பதனை தொடர்ச்சியாக அவதானிப்பதற்கான கண்காணிப்பு செயற்பாட்டை முன்னெடுத்து குறைந்த கணிதபாட பெறுபேற்றை பெறும் தோட்டப்புற மாணவர்களை ஊக்கபடுத்தி அதிகமான கணித பெறுபேறுகளை கொண்ட மலையக பாடசாலைள் மலையக மாணவர்கள் என்ற நிலையை கொண்ட வரும் வேலைத்திட்டமாக இது அமையும். ஏதிர்காலத்தில் ஏனைய பாடங்களுக்கும் இவ்வாhறன தேசிய கொள்கை அடிப்படையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கபட்டு மலையத்தின் கல்வி நிலை அதிகரிக்கப்படும்.
பா.திருஞானம்