நாட்டின் வருவாய்க்கு முதுகெலும்பாக விளங்கும் மலையக பெறுந்தோட்டமக்களுக்கான தனிவிட்டுத் திட்டத்தின் காணி உறுதி வழங்கும் நிகழ்வில் காணி அமைச்சராக இந் நிகழ்வில் கலந்து கொண்டதையிட்டு பெறுமையடைகிறேன் என காணிமற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருனாதிலக்க தெரிவித்தார்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அட்டன் டன்பார் மைதானத்தில் 29.10.2017 இன்று நடைபெற்ற எங்கள் நிலத்தில் எங்கள் வீடு எனும் தொனிப்பொருளில் மலையக புதியகிராமங்கள் ஊட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக அமைக்கபட்ட தனி விடுகளுக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்
தொடர்ந்தும் அமைச்சர் உரையாற்றுகையில்
லயன்வாழ்ககையில் இருந்து விடுபட்டு சொந்த இடத்தில் வாழ்வதற்கு மலையக மக்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது
மலையக மக்களின் வாழ்க்கையில் லயன் குடியிருப்பில் இருந்து விடுபட்டு சொந்த இடத்தில் வாழ்வதற்கு மலையக உறவுகளுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளமை ஒரு வரப்பிரசாதகமாகும்.
இதே வேளை மலையக மக்களுக்கு முதல் தடவையாக ஏழுபேச்சர்ஸ் காணியுடன் வீடுகளை பெற்றுகொடுக்கும் சந்தர்ப்பம் இதுவே முதல் தடவையெனவும் அவர் குறிப்பிட்டார் .
எனவே மலையகமக்களுடைய வாழ்க்கை ஆரம்பகாலத்தில் லயன் வாழ்க்ககையாக இருந்தாலும் இந்த நல்லாட்சியின் ஊடாக புதிய கிராமங்களாக மாறியுள்ளது.
இந்த கிராமத்தின் ஊடாக தையல் தொழில், சிகைஅலங்காரம்,இயந்திர வாகன திருத்த வேலைகளை மேற்கொள்ள முடியும் எனவே இதனைதான் எங்களுடைய பிரதமமந்திரி கனவாகவும் இருந்தது.
இன்று உலத்திலேயே விவசாயத்திலும் ஏனய துறைகளிலும் புதிய தொழிநுற்பங்கள் நவீன மயமாகி பயன்படுத்தபட்டு வருகின்றன ஆனால் ஆரம்பகாலத்தில் கையினால் கொழுநத்தினை பறித்து வந்த தோட்டதொழிலாளர்களக்கு தற்பொழுது இயந்திரங்களை கொண்டு கொண்டு கொழுந்து பறித்து கொண்டு வருகின்றனர்.
தோட்ட தொழிலாளர்களுடைய பிள்ளைகள் தொழிலாளர்களுடைய பிள்ளைகளாத்தான் இருக்க வேண்டுமென்ற சிந்தனையை என்பதை எமது அரசாங்கம் மாற்றியமைத்துள்ளது. இந்த தோட்ட தொழிலாளர்களுடைய பிள்ளைகளுக்கு இன்று பாராளுமன்றம் செல்ல கூடியதற்கு இந்த அரசாங்கம் சந்தர்பபம் வழங்கி இருக்கிறது என்பதனை இந்த வேலையிலே இதனை தெரிவித்து கொள்கின்றேன்.
வைத்தியராக, பொறியியலாளராக, ஆசிரியராக, சட்டத்தரணியாக , பதவிகளை உயர்த்தி கொள்வதற்கான சந்தர்பபம் கிட்டியுள்ளதாகவும் இதுவே எமது பிரதம மந்திரியின் நோக்கமாக அமைந்துள்ளது.
எமது நாட்டிற்கு பல ஆண்டுகள் கடந்த பின்பு பிரச்சினைகளை தேடிப்பார்த்து அதன் ஊடாக தீர்வினை கண்டுகொள்ள கூடடிய தலைவர்கள் இப்போது கிடைக்கபெற்றுள்ளார்கள் நாங்கள் இன்று ஜனாதிபதியை எடுத்து கொண்டாலும் பிரதமந்திரியை எடுத்து கொண்டாலும் சரி, அமைச்சர் திகாம்பரம் மானாலும் சரி தோட்ட தொழிலாளர்களுடைய வாழ்க்கையை உன்னத நிலைக்கு கொண்டு செல்ல முற்படுகிறார் எனவும் தெறிவித்தார்.
இந்த தோட்ட தொழிலாளர்கள் தங்களுடைய தொழிற்சங்க நடவடிக்கையின் போது பலபோராட்டங்களை நடத்த உள்ளார்கள் இருந்த போதிலும் இம்மக்கள் இந்த ஆரசாங்கத்திற்கு எதிராக ஒரு போது போராட்டங்களை முன்நெடுத்தது இல்லையெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆகேவே தோட்ட தொழிலாளர் என்பவர்கள் இந்த நிலத்துக்கு எந்தகாலத்திலும் கடன் செலுத்த தேவையில்லை நாட்டில் பிரஜாஉரிமை கிடைத்ததும் இந்த காணி உறுதி உங்கள் கையில் கிடைத்ததும் இது தனிவீடு அல்லமால் இரண்டு மாடி வீடாகவும் மாற்றி அமைத்து கொள்ளுமாறும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நோட்டன் பிரீஜ்நிருபர் மு.இராமசந்திரன்