மலையக மக்களின் உரிமைகைளை வென்று கொடுத்த தொண்டமான்- மருதபாண்டி ராமேஸ்வரன் பெருமிதம்!!

0
119

மறைந்த இ.தொ.கா. தலைவரும் அமைச்சருமான சௌமிய மூரத்தி தொண்டமான் இந்த நாட்டில் வாழும் இந்திய வம்சாவழி மக்களுக்கும் பெறுந்தோட்ட தொழிலாளர்களுக்கும் இந்த நாட்டில் வாழகூடிய உரிமைகளை பெற்று கொடுத்து வந்துள்ளார். இன்றைய இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தலைவரான ஆறுமுகன் தொண்டமான் அந்த உரிமைகளையும் எமது மக்களையும் பாதுகாத்து வருகிறார்.என மத்திய மாகாண இந்துகாலாச்சார தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உறையாற்றிய அமைச்சர் சிலர் நினைத்தார்கள் கடந்த முன்று வருடங்களுக்கு முன்பு இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆட்சிகாலம் முடிந்துவிட்டதாக ஆனால் அன்று கூறியவர்களுக்கு எமது மக்கள் முடிவடைந்த உள்ளுராட்சிசபை தேர்தலில் நல்ல பாடம் புகட்டியுள்ளார்கள் .

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 உள்ளுராட்சி சபைகளில் 11சபைகளை இலங்கை தொழிலாளர் காங்ரஸ் ஆட்சியமைத்துள்ளது. இந்த பேறுபேற்றின் பலன்தான் இலங்கை தொழிலாளர் காங்ரசையும் எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமானையும் எவராலும் அசைக்கமுடியாது எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை தொழிலாளர் காங்ரசின் 79வது மேதின கூட்டத்தை அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அனுமதியோடு தான் இந்த கூட்டத்தினை ஏற்பாடு செய்தோம். ஆனால் கொழும்பு பகுதியில் நடாத்தபடுகின்ற கூட்டங்களுக்கு தான் பொலிஸாரினால் நீர் பிரயோகத்தை மேற்கொண்டு கூட்டங்களை கலைத்துள்ளார்கள் முதன் முறையாக நுவரெலியாவில் நடைபெறுகின்ற இ.தொ.கா. மேதின கூட்டத்தை கலைப்பதற்கு நுவரெலியா பொலிஸார் தண்ணீர் தாங்கி ஒன்றினை நிறுத்தியள்ளார்கள். எமது மக்கள் அதற்கும் அஞ்சமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்ரஸ் என்பது மலையக மக்களுக்கு சிறந்த சேவைகளை செய்த ஒரு அமைப்பு எமது எதிர்வரும் காலங்களில் தீர்க்கமான முடிவுகளை பெறவேண்டுமானால் எமது மக்கள் எம்மோடு இனைந்து சிந்தித்து செயல்படுமாறு கேட்டுகொண்டார்.

 

எஸ்.சதீஸ்   டி. சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here