மலையக மக்களின் பிரச்சனைகளை இனங்கண்டு அதற்கான முழுமையான தீர்வுகளை வழங்குவதற்கு மலையக மக்கள் முன்னணி என்றும் தயாராக இருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் நிர்வாக குழு கூட்டம் தலவாக்கலை கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது.இக்கூட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்விடயத்தை குறிப்பிட்டார்.அதாவது மலையக மக்களின் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.வாழ்வாதார பிரச்சனைகளாக இருக்கட்டும் அதேபோல தொழிற்சங்க ரீதியிலான பிரச்சனைகளாக இருக்கட்டும் அவற்றை உடனடியாக தீர்க்க மலையக மக்கள் முன்னணியும் அதன் ஊழிர்களும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மலையகத்தில் பல இடங்களில் காரியாலயங்கள் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் புதிய காரியாலயங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.நுவரெலியா மாவட்டம் உட்பட முழு மத்திய மாகாணத்திலும் அதேபோல ஊவா மாகாணம் முழுவதிலும் மக்களின் குறைகளை கேட்டு உடன் தீர்வு வழங்குவதற்கான காரியாலயங்களும் அதேபோல விசேட குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.எனவே மக்கள் எந்நேரமும் மலையக மக்கள் முன்னணியோடு இணைந்து தங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் .மக்களுக்கான கதவு எப்போதும் திறந்தே காணப்படுமென லையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்