மலையக மக்களின் போஷனை மற்றும் தற்சார்பு பொருளாதார பிரச்சினைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தனது பங்களிப்பை செய்ய முன்வர வேண்டும்

0
87

மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்கள் எதிர்நோக்கும் போஷனை மற்றும் தற்சார்பு பொருளாதார பிரச்சினைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தனது பங்களிப்பை செய்ய முன்வர வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜோன் போன்ஷுவா பெக்டே, அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காந்தி சௌந்தர்ராஜன் ஆகியோர் கொண்ட குழவினரை இன்று (07.06.2023) கொழும்பில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது, அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளதாவது,

இந்த நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் செய்து வரும் உதவிகளையும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் என்ற வகையில் அந்த மக்களின் சார்பாக நன்றி கூற கடமைப்பட்டுள்ளளேன்.

இதேவேளை தாங்கள் எமது மலையக மக்களின் அபிவிருத்திக்கும் அவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், மலையகப் பகுதிகளில் பிரான்ஸ் அரசாங்கத்தின் நிதி உதவி உடன் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், போஷனை அபிவிருத்தி தொடர்பாக தாங்கள் பிரான்ஸ் தூதுவர் என்ற வகையில் தங்களின் அரசின் வழிகாட்டல்களை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் எமது நாட்டின் முதலீடுகளை மேற்கொள்ள ஆவணம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்

இது தொடர்பாக தான் பிரான்ஸ் நாட்டின் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக பெருந்தோட்ட பகுதிகளில் பால் உற்பத்தி அதிகரிக்கும் சிறு மற்றும் நடுத்தர பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், நீர் வளங்கள் கொள்கை மறுசீரமைப்பில் தொழில்நுட்ப மற்றும் திறன்சார் ரீதியான உதவிகளை வழங்க இணக்கத்தை தன்னிடம் தெரிவித்ததாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here