மலையக மக்களின் முதலாவது பெண் பேராசிரியர் கலாநிதி ராஜலட்சுமி சேனாதிராஜா_ செந்தில் தொண்டமான் வாழ்த்து

0
107

மலையக மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில் மலையகத்தின் முதலாவது பேராசிரியர் என்ற பெருமையை மலையகத்திற்கு பெற்றுத் தந்தமைக்காக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ நிதி
பீடத்தின் முதலாவது பெண் பீடாதிபதியாகவும் , கொழும்பு பல்கலைக்கழகத்தி பல தடவைகள் பதில் உபவேந்தராகவும் சிறப்பாக கடைமையாற்றிய இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத்தில்(professor in management )
பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இவரின் இந்த பதவி உயர்வானது முழு மலையகத்திற்கும் பெருமையை தேடித்தந்ததுடன், எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றது.

மேலும் இவர் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்பதுடன் மலையக கல்வி சமூகத்திற்கு ஒரு முன் உதாரணமாக திகழ வேண்டும் என வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
Attachments area

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here