மலையக மக்களின் முற்றுப்பெறாத பணிகளை இ.தொ.கா தீர்த்து வைக்கும்
மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியும் அவர்களது உள்ளங்களிலும் இல்லங்களிலும் சமாதானமும் நிம்மதியும் நிலைபெற்று பிறக்கும் இந்த சித்திரை புதுவருடத்தில் புதிய சிந்தனையுள்ள மனிதர்களாக தம்மை மாற்றக் கொள்ள இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் மனத்திருப்தி கொள்ளும் அருளை இந்த ஆண்டில் தந்தருளட்டும் என இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாக உப தலைவரும் சட்டத்தரணியும் பெருந்தோட்ட சேவையாளர்
காங்கிரசின் பொதுச் செயலாளருமான கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
எமது மலையக மக்கள் இடர்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் நாம் அவர்களை பாதுகாத்து வந்திருக்கிறோம். இந்த வரலாற்றுப் பணியை நாம் மேற்கொண்டிருப்பதை வரலாறு சான்றுபடுத்தும். இதன் காரணமாகவே தெளிந்த சிந்தனையோடும் திடமான நம்பிக்கையோடும் கொள்கைப் பற்றோடும் மக்கள் எம்மோடு கைகோர்த்து நின்கின்றனர்.
2017ம் ஆண்டில் முற்றுப் பெறாத பணிகளை 2018ஆம் ஆண்டில் இ.தொ.கா நிச்சயம் தீர்த்து வைக்கும் மலையக மக்கள் இலங்கையில் எந்தெந்த பகுதிகளில் வாழ்ந்தாலும் அவர்களது எண்ணங்கள் அபிலாஷைகள் இந்த 2018ஆம் ஆண்டில் மக்களின் எதிர்பார்ப்புகள் வாஞ்சைகள் விருப்பங்கள் பரிபூரண சந்தோஷங்கள் நிறைவேற பிரார்த்திக்கின்றேன் என்றும்
குறிப்பிட்டார்.
எஸ்.தேவதாஸ்