மலையக மக்களுக்கு இந்தியா என்றும் துணை நிற்கும்!

0
30

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மலையக அரசியல் தலைவர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது மலையக தமிழர்களுக்காக இந்தியாவால் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்திய அரசினால் மலையக மக்களுக்கும், இலங்கை நாட்டிற்கும் தொடர்ச்சியாக வழங்கி வரும் உதவிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ஜீவன் தொண்டமான் , பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகளை தெரிவித்தார்.

அதேவேளை, மலையக மக்களின் மேம்பாட்டுக்காக இந்தியா, எப்போதும் துணை நிற்கும், அதற்கு தேவையான உதவிகளை வழங்கும் என இதன்போது பிரதமர் தெரிவித்தார் என தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here