மலையக மக்களுக்கு சமூக நீதி ஒளியால் கிடைக்கும் நன்மைகள் மாற்றத்துக்கு வழிவகுக்கட்டும்

0
15

“எமது மலையக சமூகத்தை சூழ்ந்துள்ள அநீதி எனும் இருள் விலகி சமூகநீதி எனும் வெளிச்சம் பரவ தீபஒளி திருநாள் வகை செய்யட்டும். மலையக மக்களுக்கு சமூகநீதி ஒளியால் கிடைக்கும் நன்மைகள் மாற்றத்துக்கு வழிவகுக்கட்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் பாரத் அருள்சாமி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

“ தீபஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகையென்பது தீமையை நன்மை வென்றதை நினைவுகூரும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாள் எமது நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும், நல்லெண்ணத்தையும், சகோதரத்துவத்தையும் பலப்படுத்தும் என நம்புகின்றேன். நமது நாட்டில் மூவின மக்களும் ஐக்கியமாக வாழ்வதற்கு எமது கண்டி மண் சிறந்த அடையாளம். அந்த மண்ணிலேயே இம்முறை நான் தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சி என்பதையும் இந்நன்நாளில் கூறிக்கொள்கின்றேன்.

தீபாவளி பண்டிகை நமது நாட்டில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.அனைவரும் நல்லஉடல் நலத்தோடு வாழவும், வாழ்வில் துன்பம் விலகி, இன்பம் பெருகவும், செல்வம் செழித்து எல்லோரது இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகவும், அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here