மலையக மக்களை அவமானப்படுத்தும் வகையில் இணையத் தளங்களில் பதிவேற்றம் செய்த நபருக்கு எதிராக இ.தொ.கா சட்ட நடவடிக்கை!

0
127

மலையக மக்களை   அவமானப்படுத்தும் வகையில் சமூக இணையத் தளங்களில் அவதூறான செய்திகளை பரப்பி வரும் சில விஷமிகளைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று இ.தொ.கா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இவ்வாறான தீயசக்திகள் மலையக மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதான பரப்புரைகளை செய்வதன் பின்புலம் பற்றி மிக அவதானமாக செயல்பட வேண்டிய தருணமிது. உண்மைக்குப் புறம்பான அநாகரிகமான கருத்துக்களை பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க இ.தொ.கா ஆராய்ந்து வருகின்றது.

200 வருட வரலாற்றினைக் கொண்ட ஒரு சமூகத்தின் மீது அபாண்டமான எண்ணக்கருக்களை ஏற்றம் செய்வதன் மூலம் இந்த சமூக குரோத, விரோத சக்திகள் தமது எதிர்பார்ப்புகளை அடைவதை இ.தொ.கா ஒருபோதும் அனுமதிக்காது.

நேற்று மாலை இது தொடர்பில் இ.தொ.கா நிர்வாக உப தலைவரும், சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து தலைமையில் உப தலைவர்களான திரு.கருப்பையா கணேசமூர்த்தி, திரு.எஸ்.ரவீந்திரன், திரு.செல்லசாமி திருக்கேதீஸ்வரன், இளைஞர் அணி சார்பில் திரு.பி.சசிகுமார், திரு.எம்.ராஜாராம் ஆகியோர் குற்றபுலனாய்வுத் திணைக்களத்தில் புகார் செய்துள்ளனர் என ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here