மலையக மக்கள் எதனையும் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியாது போராடி தான் பெற்றுக்கொள்ள முடியும் என பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தில் நடைபெற்ற ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபகர் அமரர் அப்துல் அஸீஸ் அவர்களின் 26 நினைவு தின வைபவத்தில் கலந்துக்கொண்டு பேசியபோதே இதனை தெரிவித்தார்.
இவர் மேலும் தெரிவிக்கையில்,
40 வருடங்களுக்கு முன்பு நான் உட்பட அமைச்சராக இருந்த காமினி திஸநாயக்கா மற்றும் அஸீஸ் அவர்களும் இத்தோட்டத்திற்கு சங்க கொடியினை ஏற்றிவைப்பதுக்காக வந்தபோது மூன்று பேர் மாத்திரம் வந்திருந்தார்கள். அவர்கள் எங்களிடம் சொன்னார்கள் கொடியை மாத்திரம் ஏற்றிவிட்டு செல்லுமாறு இத்தோட்டத்திற்கு நான் அதிகமான தடவை வந்துள்ளேன் தற்போது இத்தோட்டம் படிபடியாக மாற்றம் கண்டுள்ளது.
நான் கல்வி அமைச்சராக இருந்தபோது புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கிராம பாடசாலைக்கு சென்றார்கள். நான் அவர்களை மீண்டும் தோட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பும் போது எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்கள்.
தேர்தலில் என்னை தோக்கடிப்பதற்காக எதிராக செயல்பட்டார்கள் அதனை பற்றி நான் கவலை படவில்லை நான் நினைத்தேன் சிறுவர்களின் கல்வியை மாத்திரம் தான் கருத்தில் கொண்டு செயல்பட்டேன்.
அஸீஸ் அவர்களின் காலத்தில் 1750 போராட்டம் 40 நாட்களாக நடைபெற்றது.
இன்று அரசாங்கத்தால் தனியார்க்கு வழங்கப்பட்ட 2500 ருபா கொடுப்பனவு தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கபடவில்லை இதனை பெறுவதுக்கான போராட்டம் தான் தற்போது முன்னெடுக்கபடுகின்றது.
மலையகத்தில் உள்ள பாடசாலைகளில் வள பற்றாகுறை அதிகமாக உள்ளது இதனை இலகுவான முறையில் பெற்றுகொள்ள முடியாது. பாடசாலை அதிபர்கள் அடிக்கடி கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும்.
அப்போதுதான் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் இதுவும் ஒரு போராட்டம் தான்.
அஸீஸ் அவர்களின் காலத்தில் கடைசியாக நடைப்பெற்ற சம்பள நிர்னய சபை பேச்சுவார்த்தையில் நான் கலந்து கொண்டேன் அப்போது 04 சதமாக இருந்த வாழ்க்கை புள்ளி 06 அதிகரித்தது தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தினை பேச கூடிய தகுதியை பெற்றவன் நான்தான்.
தொண்டமான் அஸீஸ் இருவரும் நல்ல நண்பர்கள் தொண்டமான் அவர்கள் கூட்டு ஒப்பந்ததினை ஏற்றுவந்த போது அஸீஸ் அவர்கள் தொண்டமானை பார்த்து முட்டால் காரியம் செய்துவிட்டாய் காலபோக்கில் இதனை எமது மக்கள் அனுபவிப்பார்கள் என்று சொன்னார்.
இதனை நாங்கள் தற்போது அனுபவிக்கின்றோம் நாட்டில் நல்லாட்சி காணப்படுகின்றது. எமது மக்களின் உரிமைகளை பெறுவதற்கான சாத்தியம் உள்ளது, இருப்பினும் போராட்டங்கள் மூலமே நாங்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியும் என இவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அஸீஸ் மன்ற தலைவர் அஷரப் உட்பட பல அதிதிகள் கலந்துகொண்டனர்.
அக்கரப்பத்தனை நிருபர் புஸ்பராஜ்