மலையக மக்கள் சார்பாக அமைச்சர் ராதா இந்திய சுதந்திர தின வாழ்த்து!

0
128

இந்தியாவிற்கு சுகந்திரம் கிடைத்தினாலயே இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தது இந்தியாவிற்கு எனதும் மலைய மக்களினதும் 70 வது சுதந்திர தின வாழ்த்துக்கள் என கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தவைவருமான் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.

தொடர்து அவரது வாழத்து செய்தியில் எமது அண்டைய சகோதரத்துவ நாடான இந்தியா தனது 70 வது சுகந்தினத்தை எமது மக்களோடு இரண்டர கலந்து கொண்டாடும் இவ்வேலையில் பாரத பிரதமரையும் பாரத ஜனாதிபதியையும் மக்களையும் வாழ்த்துவதிலே பெருமை அடைகின்றேன். இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதனாலயே இலங்கைக்கும் சுதற்திரம் கிடைத்தது. தற்போது இந்தியா எமக்கு நண்பனாகவும் துணைவனாகவும் இருந்து வருகின்றது.

அதன் பயனாக இலங்கையில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கும் இலங்கைக்கு உதவி செய்வதற்கும் இந்தியா கண்ணும் கருத்துமாக செயற்பட்டு வருகின்றது. அன்மை காலங்களிலே இலங்கையில் ஏற்பட்ட பல அணர்த்தங்களிளே இந்தியாவே எமக்கு முதல் முதலில் உதவிகளை மேற்க் கொண்டது. அந்த வகையில் இந்தியா ஒரு உற்ற நண்பனாக¸ ஒரு சகோதரத்துவ நாடாக¸ அருகாமையில் இருக்கின்ற நாடாக இருந்து வருகின்றது. இலங்கையின் பல்வேறு அபிவிருத்திகளுக்கும் உதவி செய்து வருகின்றது. ஆகவே இந்தியாவின் சுகந்திர விழாவில் அதன் உடைய பாரத பிரதம மத்திரி அவர்களுக்கும் புதிய பாரத ஜனாதிபதி அவர்களுக்கும் மக்களுக்கும் எனதும் மலையக மக்களினதும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதிலே பெருமை அடைகின்றேன். என்று கூறினார்.

பா.திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here