மலையக வரலாறு திருத்தி எழுதப்பட்டுள்ளது தனி வீட்டுத்திட்டம் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது அதே போல பல்வேறு அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது அக்கரப்பத்தனை பிரதேசத்திற்கு தனியான பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் உறுவாக்கப்படும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்
அக்கரபத்தனை மன்றாசி வைத்தியசாலைக்கு செல்லும் பாதைக்கான ஆரம்பகட்ட பணியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்
மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நிகழ்வில் தொடர்ந்து உறையாற்றிய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா மலையகத்தின் வரலாறுகள் திருத்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றது
கடந்த கால நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது நாங்கள் பாரபட்சமில்லாமல் மலையக மக்கள் செறிந்து வாழும் அனைத்து பகுதிகளுக்கும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில் தனியே வீடமைப்பு திட்டம் மட்டுமன்றி எமது மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான பிரச்சினைகள் பற்றியும் மிக கவனமாக ஆராய்ந்து அவற்றை ஆக்கபூர்வமான முறையில் மக்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது அதன் ஒரு கட்டமாக அக்கரபத்தனை பிரதேசத்துக்கென்று தனியான பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் என்பவற்றை பெற்றுக்கொடுப்பதற்காக முழுமூச்சுடன் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
மேலும் தோட்டப்புறத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பதினொறு பாதைகளில் முதலாவது பாதை இப்பகுதிக்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்திற்கு 1 கோடி ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் இன்னும் பல அபிவிருத்தி பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபையின் உறுப்பினர்களான ஆர்.ராஜாராம் . ராம் .மற்றும் சோ.ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்