மலையக வீதிகளில் பணி மூட்டம் சாரதிகள் அவதானம் பொலிஸார் எச்சரிக்கை.

0
25

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் அடை மழை பெய்து வருகிறது.அடை மழையுடன் பனிமூட்டமும் காணப்படுவதனால் மலையக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகங்களை செலுத்துமாறு போக்குவரத்து எச்சரித்துள்ளனர்.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல ,பிட்டவல, கினிகத்தேனை, கடவல, தியகல, வட்டவளை ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளையார், தலவாக்கலை, லிந்துலை நானுஓயா ரதல்ல உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
எனவே இந்த வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களுக்குரிய பக்கத்தில் வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதே வேலை தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழையுடன் கடும் குளிரும் நிலவி வருகிறது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக காசல்ரி, மவுசாகலை, லக்ஸபான, நவலக்ஸபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர மேல்கொத்மலை உள்ளி;ட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது இதனால் எந்த வேளையிலும் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்படலாம் என்பதனால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்த்தேக்கத்திற் பொறுப்பான பொறியியலாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன இதனால் மண்சரிவு அபாய மிக்க பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலைய கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களுடைய கால்நடைகளுக்கு புல் அறுக்க முடியாது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here