மலையகத்தின் பல பகுதிகளில் 02.06.2018 அன்று முதல் கடும் மழை பெய்து வருவதனால் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் மேலதிக நீர் வெளியாகி செல்கின்றன.அதனால் இந்த நீர் தேகத்தின் கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனரத்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, நீரேந்தும் பிரதேசங்களுக்கு அதிக மழை வீழ்ச்சி கிடைத்துள்ளதனால் காசல்ரீ, மவுசாக்கலை,கெனியன்,லக்ஸபான ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதுடன் இந்த நீரினை பயன்படுத்தி உச்ச அளவு நீர் மின்சாரம் உற்பத்தி செய்து வருவதாக மின்சார சபையின் அதிகாரியொருவர் தெரிவத்தார்.
தொடர்சியாக அடிக்கடி மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
தொடர்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக கால்நடை வளர்பாளர்கள் தங்களது கால்நடைகளுக்கு புல் அறுக்க முடியாது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தொடர்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதனால் மண் திட்டுகளுக்கும், மலைகளுக்கும் அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
(க.கிஷாந்தன்)