மலையத்தில் பெண்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள்- பெண் வேட்பாளர் திருமதி அலெக்சண்ட்ரா தகவல்!!

0
116

மலையக பெருந்தோட்டப்பகுதி பெண்கள் சமூகம் அவர்களது பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை
பெற்றுக்கொள்வதில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.என மலையக மக்கள் முன்னணியின் கொட்டக்கலை பிரதேசசபைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் திருமதி அலெக்சண்ட்ரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.
25% பெண்கள் அரசியலில் ஈடுப்பட வேண்டும் என அவர்களும் தேர்தல் ஒன்றின் மூலமாக சமூதாயத்துக்கு சேவையாட்ட வேண்டும் என்று கிடைத்திருக்கும் வாய்ப்பில் தைரியமாக இன்று பல பெண்கள் தேர்தல் களத்தில்
குதித்துள்ளனர்.

இந்த நாட்டில் நடைபெற்ற அதிகமான தேர்தலில் ஆண்களே இதுவரை அதிகம ஆதிக்கத்தை
கொண்டுள்ளனர்.இந்த வகையில்  இப்போது பெண்கள் குதித்துள்ள உள்ளூராட்சி தேர்தலில் பெண்கள்கள்
சமூகத்தின் வாக்குகளை நம்பியே போட்டியிடுகின்றனர். ஆனால் மலையக பெருந்தோட்ட பெண்களுக்கு நூற்றுக்கு 45% வீதம் பிறப்பு அத்தாட்சி பத்திரம் குறைப்பாடுகள் காணப்படுவதால் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆள் ஆடையாள
அட்டைகளை பெறுவதில் சிக்கல் நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளனர்.

இந்த விடயத்தை தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது கண்டறியப்பட்டு இதனை நிவர்த்தி செய்ய கடந்த சில வாரங்களில் மேற்கொளாளப்பட்ட நடவடிக்கையினால் பாரியலவிலான பிறப்பு  ஆவண பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளது.
முதலில் வாக்கு கேட்பதை முன்னெடுக்காமல் வாக்களிக்க தகுதியுள்ளதா அதற்கு ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பதில் ஈடுபட்டதால் என்னால் பலருக்கு இந்த விடத்தில் உதவமுடிந்தது.

இது போன்று மலையக பெருந்தோட்ட மக்களை நம்பி வாக்கு கேட்கும் வேட்பாளர்கள் இந்த
விடயத்தை கவனித்திருந்தால் பாரியவில் பிறப்பு ஆவண குறைப்பாடுகளை தீர்த்திருக்கலாம். இதுபோன்று காலம் காலமாக இம்மக்களுக்கு ஏற்படும் அடிப்படை பிரச்சிலைகளை கவனத்திற் கொள்ளாது வாக்குகளை மாத்திரம் பெறுவதில் கவனம் செலுத்தும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

ஹட்சன் மற்றும் கொட்டக்கலை பிரதேசத்தில் கடந்த காலங்களில் பிரதேச சபைகளின்
முறையான சலுகைகள் மற்றும் உரிமைகள் மக்களுக்கு கிடைக்கவில்லை.

இதனால் தோட்டப்பகுதிகளில் பல்வேறு அடிப்படை பிரச்சிணைகள் காணப்படுவதுடன்பிரதேச சபையின் ஊடாக செய்யப்படும் அபிவிருத்தி பணிகளும் மறுக்கப்பட்ட நிலையில் வாழும் மக்களின் ஆதங்கம் மற்றும் கோரிக்கைகள் என்னிடம் முன் வைக்கப்பட்டுள்ளது. இதனை மலையாக மக்கள் முன்னணி தலைய பொறுப்பை ஏற்றுள்ள தலைவர்
வே.இராதாகிருஸனன் அவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.

இதற்கமைவாக நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் எனக்களிக்கும் வாக்குகளினால் வெற்றியீட்டி அரசியல் பலத்துடன் நிரைவேற்றி காட்டுவேன். பெண் ஒருவர் தேர்தலில் தைரியமாக போட்டியிட்டால் எத்தனை எதிர்ப்புகளை சந்திக்க
வேண்டும் என்பதை மாற்று கட்சியினர் என்மீது காட்டிவரும் எதிர்ப்பகள் மூலம் கற்றுள்ளேன்.
ஆனால் அனைத்திற்கும் முகம் கொடுத்து முன்னேறிவரும் நான் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியினை இலக்காக கொண்டுள்ளேன்.ஆகையால் ஐக்கிய தேசிய கப்சியின் யானை சின்னத்தில் போட்டியிடும் என்னை வெற்றிபெற
வைக்கவேண்டிய பொறுப்பினை  கொட்டக்கலை கொமர்ஷல் பகுதி மக்களிடம் ஒப்படைத்துள்ளேன் என்றார்.

அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here