ஒரு வழியாக வெயில் காலம் முடிந்து மழை காலம் தொடங்கி விட்டது. பருவநிலைக்கு ஏற்ப நம் உடலை பராமரிப்பது மிக அவசியம். ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டையும் எல்லா காலங்களிலும் பேண வேண்டும்.
அதிக செலவில்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை உங்களை பராமரிக்க இதோ மழை காலத்திற்கான எளிய வழிமுறைகள்.
* மழை காலத்திலும் தலைக்கு குளித்து முடியை சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியம். குறைந்தது வாரம் இருமுறையேனும் தலைக்கு குளிக்க வேண்டும்.
* தலைக்கு குளிக்கும் முன்பு நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய்யை லேசாக சூடாக்கி வேர்க்கால்களில் மசாஜ் செய்ய வேண்டும். தலை முடியை இயற்கையான முறையில் உலர்த்தி பின்பு சீப்பால் வார வேண்டும்.
* இவ்வாறு செய்யும் போது தலைமுடி உதிர்வு குறையும். முடித்த வரை சூடு தண்ணீர் பயன்படுத்துவதை தவிப்பது உங்கள் கேசத்திற்கு மிகவும் நல்லது.
* கண்டிஷனர் பயன்படுத்துபவரக்ள் எனில் குளிர்ந்த நீரால் நன்றாக அலச வேண்டும்.
* உணவில் வைட்டமின் மற்றும் புரோட்டீன் அதிகமுள்ள உணவினை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.
* பொதுவாக மழை காலங்களில் தண்ணீர் தாகம் எடுக்காது, இருப்பினும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது பலவித பிரச்சனைகளை சரி செய்யும். குறிப்பாக சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.
* அடிக்கடி முகம்,கை மற்றும் கால் கழுவுவதை முடிந்தரையில் தவிர்த்து விடுங்கள், இவ்வாறு செய்வதால் சருமத்தின் ஈரத்தன்மை பாதுகாக்கபடும்.
* இளம் சுடுநீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் கால்களை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். பின்பு தேங்காய் எண்ணெய் கொண்டு கால் பாதங்களை மசாஜ் செய்யுங்கள்.
* நீங்களே ரிலாக்ஸாக இருப்பதாக உணர்வீர்கள். இரவு நேரங்களில் முயற்சி செய்து பாருங்கள், தூக்கமும் நன்றாக வரும்.
* கை, கால் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருப்பது அழகு மட்டுமல்ல, ஆரோக்கியமும் தான். முடிந்தவரையில் அழகுநிலையம் செல்வதை தவிர்த்து விடுங்கள்,
* பலருக்கு பயன்படுத்திய ஆடைகள், உபகரணங்கள் இவற்றையே நமக்கும் பயன்படுத்துவதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
* ஸ்கரப் செய்ய வேண்டுமா, பச்சரிசி கொண்டு செய்யலாம் அல்லது அரை முடி எலுமிச்சை பழத்தை சர்க்கரையில் தொட்டு ரசாயனம் இல்லாமல் வீட்டிலேயே ஸ்கரப் செய்து கொள்ளலாம்.
* தேங்காய் எண்ணெய் , ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதம் எண்ணெய் போன்றவற்றை மாய்சரைசர் ஆக பயன்படுத்தலாம்.