வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி விளம்பி வருஷம் சித்திரை மாதம் 1ந் திகதி (14.04.2018) சனிக்கிழமை காலை 7மணிக்கு அபரபக்க திரயோதசி திதியில் உத்தட்டாதி நஷத்திரத்தின் 1ம் பாதத்தில் மேடலக்கினத்தில் சிங்க நவாம்சத்தில் சனிகால வோரையில் புதன் சூக்கும வோரையில் தாமத குணவேளையில் நஷத்திர பஷியாகிய மயில் உண்டித்தொழிலும் செய்யுங்காலத்தில் இப்புதிய விளம்பி வருஷம் பிறக்கின்றது.
இது சித்திரை மாதம் முதலாம் திகதி அதாவது சூரியபகவான் மேட ராசிக்குள் பிரவேசிக்கும் காலம் கொண்டாடப்படுவதாகும்.
இந்த புத்தாண்டு 14.04.2018 அன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புத்தாண்டை முன்னிட்டு 13.04.2018 அன்று மழையையும் பொருட்படுத்தாமல் அட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் ஓரளவு அதிகரித்து காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது.
இதன்போது அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புத்தாண்டுக்கு ஒரு நாள் மட்டுமே இருப்பதால், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் 13.04.2018 அன்று அட்டன் நகரில் குவிந்தனர்.
அத்தோடு விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)