மவுசாகாலை நீர்தேக்கத்தின் நன்நீர் மீன் பிடி தொழில்துறையை மேம்படுத்து வகையில் 1 லட்சம் ரோவு இனம் மீன் குஞ்சுகள் பாதுகாப்பு தாங்கியில் இடப்பட்டுள்ளது.மவுசாகலை நீர்தேக்க நன்நீர் மீன் பிடி சங்கத்தினரின் வேண்டுகோளுக்கினங்க நுவரெலியா மாவட்ட நன்நீர் மீன் வளர்ப்பு திணைக்களத்தினால் 20.03.2018 மாலை மீன் குஞ்சுகள் விடப்பட்டது.
பிரதேச பெருந்தோட்ட மக்களின் போசாக்கை மேம்படுத்தும் வகையிலும் நன்நீர் மீன் பிடி தொழிலாளர்களின் தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையிலே மேற்படி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக நுவரெலியா மாவட்ட நன்நீர் மீன் வளர்ப்பு திணைக்கள அதிகாரி புத்திக்க குசான் தெரிவித்ததுடன் பாதுகாப்பு தாங்கியில் விடப்பட்டுள்ள மீன் குஞ்சுகள் 6 மாதங்களின் பின்னர் நீர்தேக்கத்தில் விடப்படவுள்ளதுடன் 1 கிலோகிராம் தொடக்கம் 2 கிலோ கிராம் வரை வளர்ச்சியடைய கூடிய மேற்படி ரோவு மீன் இனம் வருடத்தில் 20 மடங்கு இன விருத்தியடையும் எனவும் தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்