மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் குப்பைகள் அதிகரிக்கப்பட்டு சூழல் மாசடைவு ஏற்பட்டதனாலும் களனி கங்கைக்கு செல்லும் இந்த நீரில் மாசு தன்மை ஏற்பட்டுள்ளதாலும், இந்த மவுஸ்ஸாக்கலை நீர்தேகத்தில் கரையோர பகுதிகள் மற்றும் நீரேந்தும் பகுதிகளில் நிரம்பி இருக்கும் குப்பைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்று 18.03.2017 அன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ் வேலைத்திட்டத்தினை மஸ்கெலியா பொலிஸார் மற்றும் மஸ்கெலியா சிவில் அமைப்பினர் ஆகியோர் ஒன்றினைந்து மேற்கொண்டனர்.
இதன்போது நீர்தேகத்தின் கரையோர பகுதியில் துர்நாற்றத்தை வீசக்கூடிய நிலையில் காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணி விறுவிறுப்பாக முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை எதிர்வரும் காலத்தில் மவுஸ்ஸாக்கலை நீரேந்தும் பகுதிகளிலும் நீர் உள்வாங்கும் பகுதிகளிலும் காணப்படும் நீர் ஓடைகளில் பொதுமக்கள் கழிவுகளை கொட்டுவார்களாயின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
க.கிஷாந்தன், மு.இராமச்சந்திரன்