மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஸ்ரஸ்பீ கவரவில ஜனபதய பகுதியில் 11 கிராமும் 110 மில்லிகிராம் கஞ்சாவுடன், மேற்படி பகுதியைச் சேர்ந்த வெள்ளசாமி மகேஸ்வரி (வயது 54) என்ற பெண்ணை செவ்வாய்க்கிழமை (28) மாலை, பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.
மஸ்கெலியா அதிரடி படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே அப்பெண்ணிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வியாபாரத்தில் மேற்படி பெண் நெடுங்காலமாக ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் இதனால், இப்பகுதியிலுள்ள இளைஞர்கள் போதைக்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர் எனவும் பல முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்தே, அதிரடி படையினருடன் இணைந்து இவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்ததாக மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பொகவந்தலாவ நிருபர்
எஸ்.சதீஸ்