மஸ்கெலியாவில் குளவி தாக்குதலுக்கு உள்ளான 15பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

0
129

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 15 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தின் குயின்ஸ்லேண்ட் பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இவ்வாறு குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 02.07.2018 அன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

DSC09327

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 பேரும் பெண்கள் எனவும், இவர்களில் 12 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 3 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

 

க.கிஷாந்தன், எஸ் .சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here