மஸ்கெலியா – ட்ரஸ்பி தோட்ட தேயிலைத்தொழிற்சாலைக்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து துணியால் சுற்றப்பட்ட நிலையில் கட்டுத்துவக்கு ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர்.
கம்பிகளை அல்லது நூல்களை கொண்டு நீண்ட தூரத்துக்கு கட்டப்பட்டு துப்பாக்கி விசை அதில் சொருகப்படுகிறது, மிருகங்கள் அந்த கம்பி அல்லது நூலில் தட்டுப்பாட்டால் உடனே துப்பாக்கியில் உள்ள ரவை குறித்தவறாமல் மிருகத்தை தாக்கும், இப்படியான கட்டுத்துவக்கு வன்னி பகுதியில் வேட்டையாடுபவர்கள் பயன்படுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி கட்டுத்துவக்கை பயன்படுத்தியவர்கள் தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.