இச் சம்பவம் நேற்று இரவு 09 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.பீ.கே பிலான்டேசனுக்கு உரித்தான புரவுன்சீக் தோட்ட இலக்கம் ஒன்று தொடர் குடியிருப்பில் இடம் பெற்றுள்ளது.
குறித்த தீ பரவலின் போது நான்கு குடியிருப்பு பகுதியில் உள்ள கூறைகள் எரிந்து ள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
ஏனைய 12 குடியிருப்பு பகுதிக்கு தீ பரவாமல் தடுக்க தோட்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸார் தடுத்து போராடி நிறுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் புஷ்பகுமார தெரிவித்தார்.