மஸ்கெலியா சாமிமலை கொழும்புத்தோட்டத்திலிருந்து 13 தடைவையாக கதிர்காமத்திற்கு பாதயாத்திரை.

0
179

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு நன்மை வேண்டிய கதிர்காமத்திற்கு 13 தடைவையாக பாத யாத்திரை செல்வதாகவும் நேற்றைய தினம் மஸ்கெலியா கொழும்புத் தோட்டத்திலிருந்து ஆரம்பித்து பொகவந்தலா நோர்வூட் ஹட்டன் கொட்டகலை,தலவாக்கலை நுவரெலியா வழியாக 10 நாட்கள் பயணஞ் செய்து எதிர்வரும் 18 திகதி கதிர்காமத்தினை சென்றடைவதாக இந்த பாதயாத்திரையினை ஏற்பாடு செய்து தலைமை தாங்கு குருசாமி தெரிவித்தார்.
குறித்த பாதயாத்திரை ஆரம்பித்த நாள் முதல் பல்வேறு நன்மைகளும் அற்புதங்களும் நிகழ்ந்துள்ளதானால் தொடர்ந்து இந்த பாதயாத்திரையினை செய்து வருவதாகவும் கடந்த காலங்களில் பண்டாரவளை பகுதியிலிருந்து பலர் பாதயாத்திரையில் கலந்து கொண்டதாகவும் அதில் பலதடைவைகள் பாதயாத்திரையில் கலந்து கொண்டதனை தொடர்ந்து வாய் பேச முடியாத நபர் தற்போது பேசுவதாகவும் அவர் இந்த பாதயாத்திரையிலும் இணைவதாகவும் குழந்தை பேறு இன்றி மிகவும் கவலையுடன் இருந்த மற்றுமொரு பெண்ணொருவர் பாதையாத்திரையில் கலந்து கொண்டதனை தொடர்ந்து குழந்தையினை பிரசுவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அது மாத்திரமன்றி பாதையாத்திரை செல்லும் போது பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும் அதற்கு கந்தப்பெருமானுக்கு பாத பூஜை செய்து வேண்டுல் வைத்த பின் துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் நீங்கி எவ்வித இடர்பாடுமின்றி கொடியேற்றத்தில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுவதாகவும் மற்றுமொருவர் தெரிவித்தார்.

எனவே இந்த பாதயாத்திரை இந்த நாட்டில் எவ்வித தொற்று நோயும் இன்றி மக்கள் துன்பங்களிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்காக வேண்டுதல் வைத்து இந்த கதிர்காம பாதயாத்திரையினை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தனர். குறித்த பாதையாத்திரையில் பல்வேறு வேண்டுதல்களுடன் பலர் செல்வதும் குறிபிடத்தக்கது.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here