மஸ்கெலியா தாக்குதல் சம்பவத்திற்கு மஸ்கெலியா பொலிஸார் உடந்தை – கணபதி கனகராஜ் குற்றச்சாற்று!!

0
133

மஸ்கெலியா தாக்குதல் சம்பவத்திற்கு மஸ்கெலியா பொலிஸார் உடந்தை – மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் குற்றச்சாற்றுமஸ்கெலியா பிரதேச்சபையின் தலைவர் மற்றும் உபதலைவர் தெரிவு செய்யபட்டமை தொடர்பில் 28.03.2018. புதன் கிழமை அன்று இடம் பெற்ற தாக்குதல் சம்பவமானது பொலிஸாரின் ஆதரவுடனேயே குறித்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றதாக இலங்கை தொழிலாளர் காங;ரசின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் குற்றம் சுமத்தியுள்ளார் .

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆராஜக அரசியலை வண்மையாக கண்டிப்பதாகவும் மஸ்கெலியா பிரதேச்சபைக்கான வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் இலங்கை தொழிலாளர் காங்ரசினால் மறைத்து வைக்கபட்டதாக தெரிவிக்கபடும் குற்றச்சாற்று தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையின் போதே தெரிவித்துள்ளார்.

பொலிஸார் என்பவர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டியவர்கள் ஆனால் 28ம் திகதி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் முன்பாகவே தான் இ.தொ.கா.மீது கல்வீச்சி மேற்கொள்ளபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிடபட்டிருந்ததாவது இலங்கை தொழிலாளர் காங்ரஸ் என்பது நேற்று பெய்த மலையில் முளைத்த காளான் அல்ல. ஆசியாவிலே மிகபெரிய தொழிற்சங்கமாக இருந்த இ.தொ.கா.வுக்கு நபர்களை கடத்தியோ அல்லது மறைத்து வைத்தோ அரசியல் செய்யவேண்டிய அவசியம் கிடையாது. குறித்த ஐக்கிய தேசிய கட்சியின் பெண் உறுப்பினர் தனக்கு சுகயினம் காரணமாகவே நான் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையென தெரிவித்துள்ளார் .

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் எங்களது கட்சி அமோக வெற்றி பெற்று பெரும்பான்மையான பிரதேச்சபையின் தலைவர் பதவிகளை தக்கவைத்து கொண்டு வருகிறது.

இ.தொ.கா.வின் வெற்றியை தாங்கி கொள்ள முடியாதவர்கள் பொலிஸ்நிலையத்திற்கு சென்று பொய்யான முறைபாட்டினை பதிவு செய்கின்றனர். இ.தொ.கா. ஐ.தே.க.யின் உருப்பினரை கடத்திவிட்டதாக…

எனவே மலையகத்தில் மாற்றத்தை நாங்கள் தான் கொண்டுவந்தோம் என மார்பு தட்டி கொண்டிருந்தவர்களை இன்று மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். இந்த தோல்வியை பொறுத்து கொள்ளமுடியாதவர்கள் எங்கள் மீது சேறு பூச முயற்சித்து வருவதாகவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

இதேவேலை மஸ்கெலியாவில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் மஸ்கெலியா பொலிஸாரின் ஆதரவுடன் இ.தொ.கா.வினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளமையானது வண்மையாக கண்டிக்கதக்க செயல் எனவும் குறிப்பிட்டார்.

 

(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here