மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட ’ஓட்டோ சாரதிகள் சங்கம் பதிவுசெய்யப்பட வேண்டும்!!

0
140

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கம், பிரதேச சபையின் கீழ் பதிவுசெய்யப்பட வேண்டுமென்று, மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர் ஜீ.செண்பகவள்ளி அறிவித்துள்ளார்.

மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலத்தில், மலசலகூடம் மற்றும் வாகனத் தரிப்புக்காகப் பெற்றுக்கொள்ளப்படும் கட்டணங்கள் மட்டுமே, வருமானமாகக் கிடைப்பதெனக் கூறிய அவர், பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்துப் பார்க்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

மேலும், பிரதேச சபையின் நடவடிக்கைகளினூடாக, எந்தவொரு தனி நபரும் பாதிக்கப்படக் கூடாதென்று தெரிவித்ததுடன், சட்ட விரோதமான கட்டடங்களை அகற்றும்போதும் கூட, யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here