மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டம் ஐம்பது ஏக்கர் பிரிவிலுள்ள முன்பள்ளி பாடசாலைக்கு, சிறுவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியும், மஸ்கெலியாவிலிருந்து சாமிமலைக்கு சென்ற முச்சக்கர வண்டியும் பிரவுன்ஸ்விக் தோட்ட தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக, இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளதாக, மஸ்கெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில், மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் நதீஸ் , பாலகிருஷ்ணன் தாசன் ஆகிய இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.