மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் பொலிஸ்சேவை மஸ்கெலியா சாமிமலை பகுதியில் ஆரம்பித்து ஒரு மாதம் நிறைவினை முன்னிட்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையில் மஸ்கெலியா சாமிமலை கலாச்சாரமண்டபத்தில் மஸ்கெலியா பிரதேச கர்ப்பிணி தாய்மார்களுக்கான செயல்மர்வு 10.06.2018.ஞாயிற்று கிழமை ஏற்பாடு செய்யபட்டிருந்ததுஇந் நிகழ்வின் ஹட்டன் பொலிஸ் வலையத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸவித்தானாயக்க சிறுவர் பாரமரிப்பு பிரிவிற்கான முகாமையாளர் ரவிவருமன் மற்றும் மஸ்கெலியா சுகதார பரீசோதகர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேலை நிகழ்வில் கலந்து கொண்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான பொதிகளும் மதிய நேர உணவும் வழங்கி வைக்கட்டமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)