மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒன்றுக்கூடி மஸ்கெலியா அப்கட் பிரதான வீதியில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அதேவேளை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒரு கட்சி சார்பாக தனது அரசாங்க சேவையை முன்னெடுப்பதால் அவருக்கு எதிராக இடமாற்ற நடவடிக்கையை முன்னெடுக்குமாறு கோரியை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என பல இ.தொ.கா முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டகாரர்களுடன் வீதியில் அமர்ந்துள்ளனர்.
நீதி கோரி முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டம் 06.03.2018 அன்று மாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் இப்பகுதியை சேர்ந்த 500ற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
க.கிஷாந்தன் , எஸ்.சதீஸ்