மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலை வளாகத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றை, நேற்று (24) உடைத்து, தங்க நகை மற்றும் பணம் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த திருட்டு சம்பவத்தில், அரை பவுன் தங்கச் சங்கிலி நான்கு, இரண்டு வளையல்கள், மற்றும் பணம் என்பனவே கொள்ளையிடப்பட்டுள்ளன.
வீட்டில் ஒருவரும் இல்லாத வேளையில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், வீட்டு உரிமையாளர்கள் வீட்டுக்கு இரவு எட்டு மணியளவில் வந்த போது, வீடு உடைக்கப்பட்டு, நகை, பணம் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் தெரியவந்ததாகவும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த திருட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள், பல கோணங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.