மஸ்கெலியா மோதல் சம்பவத்தில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ராமேஸ்வரன்,மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிலிப்குமார் மற்றும் தொ.தே.ச.ஆதரவாளர் ஒருவர் உட்பட மூவருக்கு அட்டன் நீதவானால் பிடியானை .நடந்து முடிந்த உள்ளுராட்சிசபை தேர்தலில் கடந்த மார்ச் மாதம் 28ம் மஸ்கெலியா பிரதேசசபைக்கு தவிசாளர் ஒருவரை நியமிக்கும் சந்தர்ப்பதில் மார்ச் மாதம் 28ம் திகதி இலங்கைதொழிலாளர் காங்ரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் சார்பில் 19பேரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் 19பேரும் மொத்தம் 38பேருக்கு 25.04.2018. புதன் கிழமை இன்று அட்டன் நீதவான் நீதி மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பானை விடுக்கபட்டமைக்கு அமைய இலங்கை தொழிலாளர் காங்ரசின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் இரண்டுபேர், மற்றும் நோர்வூட் பிரதேச்சபையின் தலைவர் உட்பட பிரதேசசபை உறுப்பினர் மூன்றுபேர் முன்னிலையாகி இருந்தனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் நோர்வூட் பிரதேசசபைக்கு தெரிவுசெய்யபட்ட பிரதேச்சபை உறுப்பினர் ஒருவரும் மஸ்கெலியா பிரதேசசபைக்கு தெரிவுசெய்யபட்ட பிரதேசசபை உறுப்பினர்கள் மூன்றுபேர் உட்பட 19 ஆதரவாளர்கள் முன்னிலையாகி இருந்தனர்.
இதில் முன்னால் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் தலைவர் வெள்ளையன் தினேஸ், அட்டன் நீதவான் நீதி மன்றில் ஆஜராகவில்லை வெள்ளையன் தினேஸ் சுகயீனம் காரணமாக நீதி மன்றத்திற்கு முன்னிலையாகமைக்கு இ.தொ.கா. சார்பில் ஆஜராகிய சட்டதரணியால் மறுத்துவ அறிக்கை ஒன்றும் சமர்பிக்கபட்டது.
இதேவேலை மத்திய மாகாண இந்து கலாசார தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் ,மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிலிப்குமார் ஆகிய இருவரும் விஷேட விடுமுறையில் உள்ளதாக சட்டதரணியால் நீதவான் முன்னிலையில் அறிக்கை சமர்பித்த போது அட்டன் நீதிமன்ற நீதவான் டி.சரவனராஜாவினால் பிடியானை பிறப்பிக்கபட்டது
மேலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் 19 ஆதரவாளர்களில் ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கபட்டுள்ளதோடு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவினால் பிரதேச சமாதானத்திற்கும் பொதுமக்களுக்கு தொல்லை விளைவிக்கும் நோக்கில் கடந்த காலங்களில் நடந்து கொண்டதை முன்னிட்டு இந்த இருதரப்பினரும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுகிழமை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட்டு செல்லுமாறு நீதவானால் உத்தரவு பிறபிக்கபட்டது
இரண்டு தரப்புகளின் சட்டதரணியால் முன்வைக்கபட்ட கோறிக்கைகளுக்கமைய மூன்று பேருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதோடு ஏனையோர் ஒரு இலட்ச்சம் ரூபா சரீர பிணையில் விடுவிப்பதற்கு அட்டன் நீதிமன்ற நீதவான் டி.சரவனராஜாவினால் உத்தரவு பிறபிக்கபட்டமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)