இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையம் ஆன்மீக கலைக்கூடம் ஒழுங்கு செய்திருந்த 20 மேற்பட்ட தோட்ட மக்கள் சிவலிங்க தரிசனம் செய்வதற்காக சிவலிங்க ரதபவனி இன்று 23 ம் திகதி பிரன்லோ ஸ்ரீ சுப்பிரமணிய தேவஸ்த்தானத்திலிருந்து பக்தி பரவசத்துடன் ஆரம்பமானது.
இந்த ரதபவனி முதல் நாள் கங்கேவத்த, கலனிவத்த, ரிகாடன், எமில்டன்,வாழமலை ஆகிய தோட்டங்களிலும் இரண்டாம் நாள் ராஜமலை, இங்லிஸ்வத்த,புதுக்காடு,வலதல, ஆகிய தோட்டங்களிலும்
மூன்றாம் நாள் முள்ளுகாமம் மேல் பிரிவு,நல்லதண்ணீர் மேல் பிரிவு,மறே,ஆகிய தோட்டங்களை வலம் வந்து இறுதி நாளான நான்காம் நாள்,நல்லதண்ணீர் நகரம்,லக்ஸபான தோட்டம் ஆகிய பிரதேசங்களில் பவனி வந்து இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு 12 ஜோதிலிங்கங்கள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ள நல்லதண்ணீர் ஆன்மீக கலை கூடத்தில் ரதபவனி நிறைவு பெற்று மாலை ஆறு மணி தொடக்கம் மறுநாள் ஆறு மணிவரை மகாசிவராத்திரி நான்கு சாம விசேட பூஜைகள் நடைபெறவுள்ளன.
குறித்த ரதபவனியில் சிவராத்திரியின் முக்கியத்துவத்தினை வெளிகொனரும் அறிநெறி கருத்துக்கள், சிவராத்திரி பலன்கள், சிவராத்திரியின் அர்த்தங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் சிவராத்திரினை விளக்கும் பதாதைகள் போன்ற காட்சிப்படுத்தப்பட்டன.
இதன் போது பொது மக்கள் வீதி ஓரங்களிலும் வீடுகளிலிருந்து சிவலிங்கப்பெருமானுக்கு பக்தி பரவசத்துடன் பூஜை செய்வதனைக் காணக்கூடியதாக இருந்தன.
மலைவாஞ்ஞன்