மஹா சிவராத்திரியினை முன்னிட்டு மலையகத்தில் உள்ள சிவ ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளும் பல்வேறு நிகழ்வுகளும் இன்று இடம்பெற்றன.
மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு ஹட்டன் லிங்க நகர் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர ஆலயத்தில் பால் அபிசேகம் இன்று (18) காலை முதல் நன்பகல் வரை இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து சிவலிங்கப்பெருமானுக்கு பால் தேன் தைலம், தையிர், திரவியம், வில்வ இலை, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பூஜை பொருட்களால் அர்ச்சனை செய்து விசேட பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து நாடு மற்றும் நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பினி வறுமை நீங்கி சீறும் சிறப்பும் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ பிராத்தனையும் நடைபெற்றது
.
இந்த பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் விபூதி பிரசாதம் ஆகியன வழங்கப்பட்டன. குறித்த ஆலயத்தில் இன்று நான்கு சாம பூஜைகளும் நடைபெறுவதற்கு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆச்சிரமத்தின் பிரதம குரு கணபதி யோகி தெரிவித்தார்.
இந்த பூஜை வழிபாடுகளில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்