இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான மஹா சிவராத்திரி விரதத்தினை முன்னிட்டு மலையகத்தில் உள்ள சிவன் ஆலயங்களிலும் ஏனைய ஆலயங்களில் சிவராத்திரி பூஜைகள் 26.02.2025 மாலை ஆறு மணி முதல் சிறப்பாக நடைபெற்றன.
கொட்டகலை கொமர்சல் தர்மபுரம் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிவகாமி சமேத சுந்தரேஸ்வர தேவஸ்த்தானத்தில் சிவராத்திரியினை முன்னிட்டு முதலாம் சாம பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
பக்த அடியார்கள் சிலிங்கப்பெருமானுக்கு நீர் அபிசேகம் பால் அபிசேகம் ஆகியன இடம்பெற்றதனை தொடர்ந்து முதலாம் சாம பூஜை ஆரம்பமாகின.
விநாயகர் வழிபாடு ,ஹோம பூஜை,கும்பபூஜை அக்கினி பூஜை அதனை திரவிய அபிசேகம் ஆகியன இடம்பெற்ற உள் வீதி வலம் ஆகியன நடைபெற்றதனை தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ சிவகாமி சமேத சுந்தரேஸ்வர பெருமானுக்கு நீர் அபிசேகம் ,பால் தேன்,பஞசாமிர்தம் குங்குமம்,விபூதி ஆகிய பொருட்களால் அபிசேகம் இடம்பெற்று அலங்கார பூஜையும் நடைபெற்றன.
குறித்த பூஜை வழிபாடுகளில் பெரும் எண்ணிக்கையிலா பக்தஅடியார்கள் கலந்து கொண்டிருந்ததுடன் சமய சொற் பொழிவுகளும் இடம்பெற்றன.
மலைவாஞ்ஞன்