உலகளாவிய இந்துக்கள் 13.02.2018 அன்று செவ்வாய்க்கிழமை மஹா சிவராத்திரி விரதத்தினை பக்திபூர்வமாக அனுஷ்டித்தனர்.
அந்த வகையில், இலங்கையிலும் அனைத்து இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மலையகத்தில் அக்கரப்பத்தனை ஹோல்புறுக் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலும் சிவராத்தரி நிகழ்வுகள் பக்திபூர்வமாக 13.02.2018 அன்று இரவு இடம்பெற்றன.
அக்கரப்பத்தனை பிரதேச வாழ் இந்துக்கள் பெருமளவில் இந்தப்பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
இரவு முழுவதும் ஆலயத்தில் தங்கியிருந்து விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்று இறைவனின் இஷ்ட சித்திகளைப் பெற்றுக் கொண்டனர்.
இதன்போது, கலை நிகழ்வுகளும் விசேட ஆன்மீகச் சொற்பொழிவும் நடைபெற்றது.
(க.கிஷாந்தன்)