கடந்த கால மஹிந்தவின் ஆட்சியின் கீழ் இடம்பெற்ற நிலக்கரி ஒப்பந்தம் ஊழல்தொடர்பில் அதன் பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கு நிதிக் குற்றப்பிரிவிற்கு சுயேட்சையாக தீர்மானங்களை எடுக்கும் படி நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் வாரங்களில் குறித்த ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைசெய்வதற்கும், மஹிந்த ராஜபக்சவின் புதல்வரை நிதி குற்றப்பிரிவுக்கு அழைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் முன்னெடுக்கப்பட்ட குறித்த ஒப்பந்தத்திற்கு யோசித்த தொடர்புபட்டிருப்பதற்கான கடித ஆவணங்கள் சாட்சியாக இல்லை என்ற போதும்குறித்த ஒப்பந்தத்தை பெற அவர் தரகர் பணம் பெற்றுள்ளதாகஉறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக யோசித்தவை நேரடியாக கைது செய்ய பரிந்துரைக்கவில்லை என்றும், அவரிடம் வாக்கு மூலம் பெற்ற பிறகு அவரது குற்றங்கள் நிருபணமாகும் பட்சத்தில் நிதி குற்றப்பிரிவினரின் அனுமதியுடன் கைது செய்யுமாறு நீதவானால் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதற்கு முதல் இவ்வாறான நிலைமைகளின் போது ஏற்பட்ட சிக்கல் நிலையினால் இவ்வாறு நீதவான் பரிந்துரைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.